ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்?
[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்] அப்துல்லா: என்னடா சாப்பிட்டாச்சா? அப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்டாயா? அப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா? இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி. அப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே. அப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது. அப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன்,...