Posts

இலங்கை முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.

Image
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 2012 ம் ஆண்டுதான் நாடளாவிய சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது . 1981ம் ஆண்டு சனதொகை கணக்கெடுப்பில் 7.64 வீதமாக (1,134556) இருந்த முஸ்லீம்கள் புதிய கணக்கெடுப்பில் 9.71 வீதமாக (1,967,227) வளர்ச்சியடைந்திருந்தனர் . மதமாற்றங்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளது . இந்த அதிகரிப்பு பெரும்பான்மையான பெளத்தர்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கியுள்ளது . பௌத்த அடிப்படைவாதிகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இடையில் ஒரு முறுகள் நிலையே உள்ளது . துஆ குறிப்புகள் 1.                    அடிப்படைவாத மோதல்களால் பாதிப்புக்குள்ளாகின்ற இளைய சமுதாயத்தை இறைவன் காக்கவும் . அவர்களுக்கு சுவிசேஷத்தை செவிமடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றும் துஆ செய்வோம். . 2.                    இலங...

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின் . யோவான் 1:40-42  40 யோவான் சொன்னதைக் கேட்டு , அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன் . 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு : மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான் ; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம் . 42 பின்பு , அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான் . இயேசு அவனைப்பார்த்து : நீ யோனாவின் மகனாகிய சீமோன் , நீ கேபா என்னப்படுவாய் என்றார் ; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் . பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா , திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன் . பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும் , மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார் . அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது ; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை . அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார்...