Posts

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின்.

ஈஸாவை ஈமான் கொள்ளும் முதலாவது முஃமின் . யோவான் 1:40-42  40 யோவான் சொன்னதைக் கேட்டு , அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன் . 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு : மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான் ; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம் . 42 பின்பு , அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான் . இயேசு அவனைப்பார்த்து : நீ யோனாவின் மகனாகிய சீமோன் , நீ கேபா என்னப்படுவாய் என்றார் ; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் . பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா , திபேரியாக் கடற்கரைக் கிராமமாகிய பெத்சாயிதாவிலுள்ள ஒரு மீனவன் . பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானத்தைப் பெறுவதற்காகவும் , மேசியாவின் வருகைக்காக காத்திருப்பதற்காகவும் அவர் ஸ்நானகனிடத்தில் வந்திருந்தார் . அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது ; அவர் முதலில் கண்டுகொண்டதை தன்னோடு வைத்திருக்க அவரால் முடியவில்லை . அவர் அந்நியர்களிடம் அதை அறிவிக்காமல் முதலில் தன்னுடைய சகோதரனைத் தேடுகிறார்...

ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா?

யோவான் 1:31-34  31 நானும் இவரை அறியாதிருந்தேன் ; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக , நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான் . 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது : ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி , இவர்மேல் தங்கினதைக் கண்டேன் . 33 நானும் இவரை அறியாதிருந்தேன் ; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் : ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ , அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார் . 34 அந்தப்படியே நான் கண்டு , இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான் . நபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து , மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார் . இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது , அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர் . இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறை...