Posts

நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும்.

ஈஸா அல் மஸீஹ்                        பகுதி 6 நித்திய ஒளியாகிய அவரின்றி இருளும் ஏமாற்றமும் மாத்திரமே இருக்கும் . இதன் காரணமாக பிறப்பிலிருந்து ஒவ்வொரு மனிதனும் இருளின் நிலைக்குட்பட்டிருக்கிறான் . ஒளியினிடத்துக்கு திரும்பும் வழியை அவன் தேடுகிறான் . இந்த ஒளியில் மனிதனால் நீதிக்குரிய பண்புகளை பார்க்க முடியாது . அவனது செயல்கள் பாதை மாறியிருக்கின்றன . அவனது கைகள் கறைபட்டுள்ளன . சூரிய ஒளி வாழ்க்கைக்கு அற்புதமான சூழலையும் நிறைவான ஆரோக்கிய த்தையும் உருவாக்குமென எமக்கு தெரியும் . மறுபுறத்தில் இருள் பக்டீரியாக்களுக்கான ஆரோக்கிய மற்ற சூழலையும் அழிவையும் உருவாக்குகிறது . அதேபோல் , அல்லாஹ்வின் ஒளி இல்லாவிட்டால் அதன் முடிவு நப்ஸின் அழிவாகத்தானிருக்கும் . ஒரு வியாதி இருதயத்தை பாதிக்க ஆரம்பிக்கிறது . அது என்ன வியாதி ? ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் கிருமி என்ன ? அதுவே சுய மகிமை . இந்த சுய மகி...